அயோத்தி ராமர் கோவில் பெயரில் போலி இணையதளம்: பல லட்சம் மோசடி….5 பேர் கொண்ட கும்பல் கைது..!!

22 June 2021, 1:40 pm
Quick Share

நொய்டா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி நன்கொடை என்ற பெயரில் மக்களிடம் பண மோசடி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்களிடம் நன்கொடையும் பெறப்பட்டது. இந்நிலையில், ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் மூலம் மோசடியாக பணம் பெறுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

cyber_crime_updatenews360

இதனையடுத்து நொய்டா சைபர் கிரைம் போலீசாரும், லக்னோ சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை அயோத்தியா என்ற பெயரில் இணையதளம் தொடங்கி அதில் ஒரு வங்கிக் கணக்கு எண்ணை பதிவிட்டு கோயிலுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் இந்த வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக நன்கொடையாக மக்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை இவர்கள் மோசடியாகப் பெற்றுள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டதில் 3 பேர் அமேதியை சேர்ந்தவர்கள், 2 பேர் பீஹாரை சேர்ந்தவர்கள். ஐவரும் கூட்டு சேர்ந்து கிழக்கு டெல்லியின் புதிய அசோக் நகரில் தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Views: - 174

0

0