திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகர் : ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு!!

22 January 2021, 12:51 pm
Bawan Kalyan Visit Tirupati- Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் வந்ததை அறிந்த ரசிகர்கள் தொண்டர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகரும், ஜன சேனா கட்சி தலைவரும் ஆன பவன்கல்யாண் இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்குள் சென்ற அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் சாமி கும்பிட்ட பின் அவருக்கு ஷேச வஸ்திரம், தீர்த்த பிரசாதங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

பவன் கல்யாண் வந்திருப்பது பற்றி தகவல் அறிந்த கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் ஆகியோர் ஏழுமலையான் கோவில் முன் திரண்டனர். கோவிலில் இருந்து அவர் வெளியில் வந்தவுடன் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் ஆகியோர் ஆர்வம் காட்டினர். எனவே போலீசார் தலையிட்டு அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Views: - 0

0

0