திருமணத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய நவ்ரீத் சிங்..! டிராக்டர் பேரணியில் பங்கேற்று உயிரிழந்த சோகம்..!

27 January 2021, 7:33 pm
farmers_overturned_tractor_Updatenews360
Quick Share

டெல்லியில் நேற்று நடந்த விவசாயிகள் வன்முறையில், ஐ.டி.ஓ பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்த நபர் தனது திருமணத்தை கொண்டாட சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியிருந்தார் எனும் சோகமான தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் திருமணம் நடந்த நிலையில் அதைக் கொண்டாடுவதற்காக, உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார். ஆனால் கொண்டாட்டம் இருக்க வேண்டிய அவரது வீடு தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.

நவ்ரீத் சிங் யார்?

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் திருமணம் முடித்த பின்னர், சொந்த ஊரில் வரவேற்பு விருந்து கொடுக்க திட்டமிட்டிருந்தார்அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்காக நவ்ரீத் சிங் ஆஸ்திரேலியாவிலிருந்து தனது சொந்த கிராமத்திற்கு ஒரு திருமண வரவேற்பு விருந்துக்காக வந்திருந்தார்.  

தனது மாமாக்களால் டிராக்டர் பேரணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நவ்ரீத் சிங், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் நுழைந்தார். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களில் பங்கேற்கவும், நீல டிராக்டரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகவும் சமூக ஊடகங்களில் பரவிய காட்சிகள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது, மத்திய டெல்லியின் ஐ.டி.ஓவில் ஒரு போலீஸ் தடுப்பை உடைக்க முயன்றபோது, ​​27 வயதான நவரீத் சிங், அவர் ஓட்டி வந்த கவிழ்ந்ததால், டிராக்டரின் அடியில் நொறுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போலீசார் முயன்ற நிலையில், போராட்டக்காரர்கள் அருகில் செல்லக்கூட அனுமதிக்கவில்லை எனும் தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று இரவு உடல் ராம்பூரை அடைந்தது.

“நாங்கள் அணிவகுப்பில் பங்கேற்க ஒன்றாக வந்தோம். ஆனால் அது நடக்கும் என்று ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்று அவரின் பக்கத்து வீட்டுக்காரர் கூறினார்.

தீயாய் பரவிய வதந்தி

ஆரம்பத்தில் நவ்ரீத் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்ததாக ஒரு வதந்தி காட்டுத்தீ போல் பரவியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இது தொடர்பான வீடியோ காட்சிகள் தெளிவாக இருந்ததால், டெல்லி போலீஸ் மீதான போலி குற்றச்சாட்டு அம்பலமானது.

தகனத்திற்கு முந்தைய சடங்குகளுக்காக திப்திபா கிராமத்தில் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரியாதை செலுத்துவதற்காக ஏராளமான உள்ளூர்வாசிகள் இன்று குடும்பத்தினரின் வீட்டிற்கு வந்தனர். ராம்பூர் மாவட்டத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கை மறுஆய்வு செய்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

அவரை தியாகி என்று வர்ணித்த நவ்ரீத்தின் குடும்ப உறுப்பினர்கள், அவர் உயர் கல்விக்காக ஆஸ்திரேலியா சென்று சமீபத்தில் அங்கு திருமணம் செய்து கொண்டார் என்று கூறினர்.

இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைத் தாக்கும் முயற்சியில் சில விவசாயிகள் தங்கள் டிராக்டர்களை வேகமாக ஓடியதால் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 12

0

0

1 thought on “திருமணத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய நவ்ரீத் சிங்..! டிராக்டர் பேரணியில் பங்கேற்று உயிரிழந்த சோகம்..!

Comments are closed.