முடிவுக்கு வருமா 50 நாட்களை கடந்த விவசாயிகளின் போராட்டம்? இன்று மத்திய அரசுடன் 9வது கட்ட பேச்சுவார்த்தை..!!

15 January 2021, 7:06 am
Farmers Protest - Updatenews360
Quick Share

டெல்லி : மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான 9வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான தொடர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, இந்தப் போராட்டம் 50 நாட்களை கடந்து விட்டது.

7 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 8வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதில், 40 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது. இதனால், எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்தது.

இந்த நிலையில், இரு தரப்பினரிடையே இன்று 9வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதிலாவது, உடன்பாடு ஏற்படுமா..? நாடே உற்று நோக்கி வருகிறது. முன்னதாக, 3 வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0