“விவசாயிகளை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள்”..! செய்தியாளர் கூட்டத்தில் வெடித்த ராஜ்நாத் சிங்..!

20 September 2020, 8:56 pm
union_ministers_press_brief_updatenews360
Quick Share

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விவசாய சீர்திருத்த மசோதாக்கள் குறித்து அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகளை விளாசினார்.

மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பிரஹலாத் ஜோஷி, பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் தவார் சந்த் கெலாட் ஆகியோருடன் பாதுகாப்பு அமைச்சர் புதுடெல்லியில் ஊடகங்களுக்கு விவசாய மசோதாக்கள் குறித்து விளக்கினார்.

விவசாய மசோதாக்கள் குறித்த அச்சங்களைத் தீர்ப்பதற்கான முயற்சியில், ராஜ்நாத் சிங், தான் ஒரு விவசாயி என்றும், “எம்.எஸ்.பி (குறைந்தபட்ச ஆதரவு விலை) மற்றும் ஏ.பி.எம்.சி (வேளாண் உற்பத்தி சந்தைக் குழு) அமைப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்று நாட்டின் விவசாயிகளுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

முன்னதாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அநாகரீகமான நடத்தைகளை பதிலளித்த அவர், “இன்று மாநிலங்களவையில் நடந்தது வருத்தமளிக்கும், துரதிர்ஷ்டவசமான மற்றும் வெட்கக்கேடானது. சபையில் விவாதங்களை நடத்துவது ஆளும் தரப்பினரின் பொறுப்பாகும். ஆனால் அதன் கண்ணியத்தை பராமரிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை.” எனக் கூறினார்.

“எனக்குத் தெரிந்தவரை, இது போல் மக்களவை அல்லது மாநிலங்களவையின் வரலாற்றில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. மாநிலங்களவையில் இது நடப்பது இன்னும் பெரிய விஷயம். வதந்திகளின் அடிப்படையில் விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.” என்று பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷுக்கு எதிராக எதிர்க்கட்சி முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், “துணைத் தலைவருக்கு எதிராக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவரால் ஒரு முடிவு எடுக்கப்படும். அரசியல் ரீதியாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இது தலைவரின் தனி அதிகாரத்திற்கு உட்பட்டது.” என்றார்.

விவசாய மசோதாக்கள் தொடர்பான வேறுபாடுகள் காரணமாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ஷிரோமணி அகாலிதளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் எடுத்த முடிவு குறித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர், இதுபோன்ற ஒவ்வொரு முடிவிற்கும் பின்னால் சில அரசியல் காரணங்கள் இருப்பதாக வலியுறுத்தினார்.

Views: - 10

0

0