டிராக்டர் பேரணியை திசை மாற்றிய விவசாயிகள்..! டெல்லியில் கடும் வன்முறை..! பதறவைக்கும் காட்சிகள்..!

26 January 2021, 2:27 pm
Delhi_Farmers_Protest_UpdateNews360
Quick Share

மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், இன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணிகளை நடத்துவதாகக் கூறி, நகரின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்திய தகவல்களின்படி, ஐ.டி.ஓ பகுதியில் விவசாயிகள் டெல்லி காவல்துறையினருடன் மோதியதோடு, வாள்கள் மற்றும் லத்திகளால் தாக்கி, டிராக்டர்களைக் கொண்டு பல்வேறு இடங்களுக்கும் பரவி வருவதால் நிலை மோசமடைந்துள்ளது.

சோஷியல் மீடியாவில் வெளியாகும் காட்சிகள் படி, விவசாயிகள் தடுப்புகளை உடைப்பது, டிடிசி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் மற்றும்ம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கற்களை வீசி தாக்குதல் நடத்துவதைக் காண முடிகிறது.

இரண்டு டிராக்டர்கள் ஐ.டி.ஓவில் சாலையின் நடுவில் சென்று டெல்லி காவல்துறையினர் மேல் ஏற்ற முயன்றன. ஆனால் அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை.

இதற்கிடையே, மத்திய டெல்லியில் உள்ள ஐ.டி.ஓவில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடந்த நிலையில், விவசாயிகளில் ஒரு பகுதியினரால் மீட்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. ஐ.டி.ஓவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

விவசாயிகளின் போராட்டத்தின் போது, ​​தில்ஷாத் கார்டனில் பணியில் இருந்த காவலர் ஒருவர் மயக்கமடைந்தார். இப்போது சுயநினைவு அடைந்த பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

இதற்கிடையில், விவசாயிகளின் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) அமைப்பின் ராகேஷ் டிக்கைட் விவசாயிகளால் வன்முறை நடந்ததாக வெளியாகும் அறிக்கைகளை மறுத்துள்ளார்.

“பேரணி அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. நாங்கள் காசிப்பூரில் இருக்கிறோம்.” என்று அவர் கூறினார்.

போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல மெட்ரோ நிலையங்களின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே டெல்லியின் மையப் பகுதிகளை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், செங்கோட்டைக்குள்ளும் நுழைந்து வன்முறையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0

1 thought on “டிராக்டர் பேரணியை திசை மாற்றிய விவசாயிகள்..! டெல்லியில் கடும் வன்முறை..! பதறவைக்கும் காட்சிகள்..!

Comments are closed.