பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது காசிப்பூர் எல்லை..! வலுவிழந்து விட்டதா விவசாயிகள் போராட்டம்..!

2 March 2021, 12:15 pm
ghazipur_border_updatenews360
Quick Share

காசிப்பூர் வழியாக காசியாபாத்துடன் டெல்லியை இணைக்கும் சாலை வாகன இயக்கத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. டிராக்டர் அணிவகுப்பின் போது விவசாயிகள் டெல்லி சாலைகளில் வன்முறை கட்டவிழ்த்துவிட்டதால் ஜனவரி 26 முதல் இந்த சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு முற்றிலுமாக மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மாற்று வழிகளில் செல்ல வேண்டியிருந்ததால், அருகிலுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முன்னதாக வன்முறைக்குப் பின்னர் டெல்லி-உ.பி. காசிப்பூர் எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்புத் தடுப்புகளை அதிகரித்தனர். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்த ஜனவரி 26’ஆம் தேதி உழவர் சங்கங்கள் அழைத்த டிராக்டர் அணிவகுப்பின் போது எதிர்ப்பு தெரிவித்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் போலீசாருடன் மோதினர். 

ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்மொழியப்பட்ட டிராக்டர் அணிவகுப்புக்காக நியமிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி செங்கோட்டைக்குள் நுழைந்தனர். போலீசார், போலீஸ் வாகனங்கள் மற்றும் செங்கோட்டையில் டிக்கெட் கவுண்டர் போன்றவற்றையும் தாக்கினர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் மூன்று முக்கிய தளங்களில் காசிப்பூர் ஒன்றாகும். இங்கு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள், பெரும்பாலும் பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

எவ்வாறாயினும், 2020 செப்டம்பரில் இயற்றப்பட்ட மூன்று சட்டங்கள் விவசாயத் துறையில் பெரிய சீர்திருத்தங்களாக மத்திய அரசால் கணிக்கப்பட்டுள்ளன. அவை இடைத்தரகர்களை அகற்றி விவசாயிகளை நாட்டில் எங்கும் விற்க அனுமதிக்கும். இந்த மூன்று சட்டங்களும் எம்.எஸ்.பி மற்றும் விவசாய மண்டிகளை அகற்றாது என்று அரசாங்கம் பலமுறை விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளது.

எனினும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் போராட்டம் வலுவிழந்து விட்டதால் தான் மீண்டும் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 1

0

0