டெல்லியை வாட்டும் வெயில்: எல்லையில் 137வது நாளாக விவசாயிகள் போராட்டம்…!!

12 April 2021, 8:50 am
delhi protest - updatenews360
Quick Share

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் 137வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களையும் தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து முடிவெடுத்துள்ளனர். இந்த மாதம் பல்வேறு முறைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவுசெய்துள்ளனர்.

அதன்படி வரும் ஏப்ரல் 13ம் தேதி, ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. அதேபோல வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ‘அரசியலமைப்பு பாதுகாப்பு தினம்’ மற்றும் ‘கிசான் பகுஜன் ஒற்றுமை நாள்’ ஆகியவற்றை அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 137வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Views: - 21

0

0