தொடர் பேரணியிலும் அமைதியுடன் இறை வழிபாடு: குரு நானக் ஜெயந்தி பிரார்த்தனையில் விவசாயிகள்…!!

30 November 2020, 12:52 pm
prot 1 - updatenews360
Quick Share

புதுடெல்லி: டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குரு நானக் ஜெயந்தியையொட்டி அமைதியுடன் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற கோரியும் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, லாரிகளிலும், டிராக்டர்களிலும் படையெடுத்த விவசாயிகள் உணவை அவர்களை சமைத்து உண்டு, கடும் குளிரில் படுத்து உறங்கி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, டெல்லி வடக்கு பகுதிக்கான இணை ஆணையர் சுரேந்திரா கூறுகையில், அவர்கள் அமைதியுடனும், கட்டுப்பாட்டுடனும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம். எங்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட வேண்டும். அதற்காக போதிய படைகளை குவித்து உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீக்கியர்களின் மத குருவான குருநானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிங்கு எல்லை பகுதியில், நின்றபடி தங்களது இறை வணக்கத்தினை செலுத்தி கொண்டனர். இதேபோன்று திக்ரி எல்லை பகுதியில் இருந்த விவசாயிகள் தரையில் அமர்ந்தபடி, இறை நூல்களை படித்தும், பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

Views: - 0

0

0