வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோ….டிராக்டருடன் தடுத்து நிறுத்திய விவசாயி: இணையத்தில் குவியும் பாராட்டு..!!

Author: Aarthi Sivakumar
30 August 2021, 4:39 pm
Quick Share

தெலங்கானா: வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஆட்டோவை, வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் டிராக்டர் உதவியுடன் தடுத்து நிறுத்திய விவசாயியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். சாலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், விகராபாத் மாவட்டத்தில் உள்ள எலகொண்டா கிராமத்தில் சாலையில் திடீரென வெள்ள நீர் சூழ்ந்தது. அப்போது, ஆட்டோ ஓட்டுநர் வெள்ளத்தில் அடித்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை கண்ட விவசாயி ஒருவர், துரிதமாக சிந்தித்து தனது டிராக்டர் உதவியுடன் ஆட்டோவையும், அதன் உரிமையாளரையும் காப்பாற்றியுள்ளார்.

இதனை கரையில் நின்றிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 340

0

0