ஆடை வடிவமைப்பாளர் ஷர்பரி தத்தா மர்ம மரணம்..! பேஷன் உலகினர் அதிர்ச்சி..!

18 September 2020, 12:28 pm
fashion_designer_Sharbari_Dutta_UpdateNews360
Quick Share

ஆடை வடிவமைப்பாளர் ஷர்பரி தத்தா நேற்று இரவு தனது தெற்கு கொல்கத்தாவின் பிராட் ஸ்ட்ரீட்டில் உள்ள அவரது இல்லத்தில் குளியலறையில் இறந்து கிடந்தார். போலீஸ் வட்டாரங்களின்படி, தத்தா இன்று அதிகாலை 12.15 மணியளவில் தனது குளியலறையில் இறந்து கிடந்தார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகள் இரவில் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு உணவின் போது 63 வயதான தத்தாவை கடைசியாக கண்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

முதன்மை விசாரணையில் அவர் கழிவறையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தத்தாவின் குடும்ப உறுப்பினர்கள் அவர் நன்றாக இருப்பதாகவும், இதுபோன்ற நீண்டகால வியாதி எதுவும் இல்லை என்றும் கூறினர்.

ஆடை வடிவமைப்பாளரின் திடீர் மறைவுக்கு உண்மையான காரணம் கண்டுபிடிக்க கொல்கத்தா காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் தத்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிரபல பெங்காலி கவிஞர் அஜித் தத்தாவின் மகள், ஷர்பரி தத்தா கடந்த சில தசாப்தங்களாக ஆடை வடிவமைப்பு துறையில் பிரபலமான நபராக இருந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்துள்ளது பேஷன் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0 View

0

0