மதுவுக்கு அடிமையான தந்தை : மனைவி மீதுள்ள கோபத்தால் போதையில் 15 மாத குழந்தையை அடித்தே கொன்ற கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 4:00 pm
Father Kills Baby- Updatenews360
Quick Share

ஆந்திரா : குடிபோதையில் பெற்ற 15 மாத பெண் குழந்தையை அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாத்தகனுப்பூரு கிராமத்தை சேர்ந்த மது என்பவர் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வருவது வழக்கம். இந்த தம்பதிக்கு 15 மாத பெண் குழந்தை உள்ளது.

பார்த்தகனுப்பூரு் கிராமத்தைச் சேர்ந்த மதுவுக்கு மது மீது கொள்ளை பிரியம். அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக மது அருந்திவிட்டு மனைவியை அடிப்பது வழக்கம், இந்த நிலையில் குடிபோதையில் குடும்ப பிரச்சனை காரணமாக தங்களுடைய 15 மாத பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்தார்.

மனைவி மீது இருந்த கோபம், குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்த அவர் தங்களுடைய 15 மாத குழந்தையை அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நாயுடு பேட்டை போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கொலையாளி மதுவை தீவிரமாக தேடி வருகின்றனர்

Views: - 392

1

0