பர்சில் இருந்து 50 ரூபாய் எடுத்த மகனை அடித்தே கொன்ற தந்தை: போலீசில் ஒப்படைத்த அக்கம் பக்கத்தினர்..!!

Author: Aarthi Sivakumar
2 January 2022, 10:03 am
Quick Share

தானே: பர்சில் இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக 10 வயது மகனை அடித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்வா நகரில் வசிப்பவர் சந்தீப் பிரஜாபதி. இவருக்கு 10 வயதில் மகன், 6 வயதில் மகள் உள்ளனர்.

இவரது மனைவி மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவரது பர்சில் இருந்து 50 ரூபாயை மகன் எடுத்துள்ளான். ஆத்திரம் அடைந்த சந்தீப், மகனை கண்மூடித்தனமாக அடித்துள்ளார். மயங்கி விழுந்த மகனை போர்வையில் சுருட்டி வைத்து சென்று விட்டார்.

இதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல் அடிப்படையில், போலீசார் வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால் அவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தீப் பிரஜாபதியை கைது செய்தனர்.

பணத்தை எடுத்ததற்காக மகனை தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 203

0

0