3 வயது மகனை கண்மூடித்தனமாக தாக்கிய தந்தை : ரசித்து பார்த்த மனைவி!!(அதிர்ச்சி வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 1:40 pm
Father Attacked Son -Updatenews360
Quick Share

தெலுங்கானா : முதல் மனைவிக்கு பிறந்த 3 வயது சிறுவனை 2-வது மனைவி கண் முன்னே கணவன் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் டிராக்டர் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் நாகராஜ்.

இவரது முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் முதல் மனைவிக்கு இவருக்கும் பிறந்த 3 வயது சிறுவனை பெற்ற தந்தையே துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது இரண்டாவது மனைவியுடன் சிறுவனுக்கு உணவு அளித்துக் கொண்டே சிறுவனை கடுமையாக பெற்ற தந்தையை தாக்கிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை தந்தை அடிப்பதை கவனிக்கும் இரண்டாவது மனைவி, அடிப்பதை தடுக்கவோ கண்டிக்கவோ செய்யாமல் ரசித்து வருவது குறிப்பிடதக்கது.

Views: - 355

2

1