ரெம்டெசிவர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் : உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை

7 May 2021, 6:54 pm
remdesivir- Updatenews360
Quick Share

ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ரெம்டெசிவர் மருந்து தயாரிப்பு ஆய்வகத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். உற்பத்தியை அதிகரிப்பதால் மருந்து பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என கூறினார்.

மேலும் ரெம்டெசிவர் அரசு நிர்ணயம் செய்த விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து வருவதாகவும், கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Views: - 138

0

0