சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம்..! உறுதி தந்த நிர்மலா சீதாராமன்

15 February 2020, 10:31 am
Quick Share

டெல்லி: பட்ஜெட்டில் சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்து இருக்கிறார்.

டெல்லியில், பட்ஜெட் தொடர்பாக பல்வேறு துறை பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது பொருளாதார செயல்பாடுகளை புதுப்பிப்பதற்கான யோசனைகளை பிரமுகர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், சில உறுதிமொழிகளை அளித்தார்.

அவர் கூறியதாவது: பட்ஜெட் பங்கு மதிப்பு, பத்திரங்கள், பண சந்தைகள் ஆகியவற்றின் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சிக்காக பட்ஜெட்டுக்கு அப்பாலும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.

ஒரு வேளை அப்படி இருக்குமானால் அதற்கும் மத்திய அரசு தயாராக இருக்கிறோம். இங்கு கூறப்பட்ட யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply