மம்தா பானர்ஜி மீது எஃப்.ஐ.ஆர்..! மத்திய துணை ராணுவப் படைகளை தாக்க தூண்டியதற்காக வழக்குப்பதிவு..!

15 April 2021, 7:47 pm
Mamata_Banerjee_UpdateNews360
Quick Share

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது, மத்திய துணை ராணுவப் படைகளை முடக்க மக்களை தூண்டி விட்டதற்காக போலீஸ் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மத்திய படைகளுக்கு எதிராக வாக்காளர்களைத் தூண்டிவிட்ட நிலையில், சிதல்குச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்து, பின்னர் நான்கு பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூச் பெஹாரில் உள்ள பாஜகவின் சிறுபான்மை பிரிவின் மாவட்டத் தலைவர் சித்திக் அலி மியா, பானேஸ்வர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் மம்தா பானர்ஜியின் கருத்துக்களை மேற்கோள் காட்டி நேற்று புகார் அளித்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாதபங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்த சித்திக் அலி தனது புகாரில் மம்தா பானர்ஜியின் உரையின் வீடியோ கிளிப்பை இணைத்து வழங்கியுள்ளார்.

மம்தா பானர்ஜியின் இத்தகைய ஆத்திரமூட்டும் அறிக்கைகளால் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் சிலர் ஆத்திரமடைந்த பின்னர், அங்கு நிறுத்தப்பட்ட துணை ராணுவப் படைகளின் ஆயுதங்களை பறிக்க முயன்றனர் என சித்திக் அலி மியா கூறினார்.

அடுத்த சில நாட்களில் எஃப்.ஐ.ஆர் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முதலமைச்சரைக் கைது செய்யக் கோரி பெரிய அளவில் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக பாஜக தலைவர் சித்திக் அலி மியா மேலும் கூறினார்.

“அந்த நான்கு பேரின் மரணத்திற்கு மம்தா பானர்ஜி மட்டுமே பொறுப்பு. எங்கள் மாவட்டத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர் பதிலளிக்க வேண்டும்” என்று சித்திக் அலி மியா கூறினார்.

Views: - 28

0

0