பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கொளுந்து விட்டு எரிந்த தீ : பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2021, 4:22 pm
Fire -Updatenews360
Quick Share

ஆந்திரா : பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், இயந்திரங்கள் எரிந்து நாசமடைந்தன.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கன்னவரம் அருகே விஜயா பாரிமில்ஸ் என்ற பெயரில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரங்கள் ஆகியவை கருகி சேதமடைந்தன.

தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த கண்ணபுரம் தீயணைப்பு படையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 203

0

0