கோவாக்சின் தடுப்பூசியின் முதல் சரக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியைச் சென்றடைந்தது..!

13 January 2021, 11:53 am
Air_India_Covaxin_UpdateNews360
Quick Share

பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியின் முதல் சரக்கு இன்று ஒரு விமானம் மூலம் ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. பாரத் பயோடெக்கிலிருந்து முதல் தடுப்பூசி ஏர் இந்தியா ஏஐ 559 மூலம் ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு இன்று 06.40 மணிக்கு புறப்பட்டது. 

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது பரிசோதிக்கப்பட்டன மற்றும் பக்க விளைவுகள் மிகக் குறைவு என்று நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்தார்.

“இரண்டு தடுப்பூசிகளும் அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பாதுகாப்பு குறித்து எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. அவை ஆயிரக்கணக்கான மக்கள் மீது பரிசோதிக்கப்பட்டன மற்றும் பக்க விளைவுகள் மிகக் குறைவு. எந்தவொரு ஆபத்தும் இல்லை.” என டாக்டர் பால் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் ஜனவரி 16’ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், தடுப்பூசி போடுவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு நெருக்கமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.” என்று அவர் கூறினார்.

கோவாக்சின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0