முதல் முறையாக மும்பை விநாயகர் சதுர்த்தியில் இது கட்..! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

1 July 2020, 2:34 pm
ganeshotsav_updatenews360
Quick Share

கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து இந்த முறை கணேஷ் உற்சவத்தை நடத்த வேண்டாம் என்று மும்பையின் லால்பாக் ராஜ கணேஷ் உத்ஸவ் மண்டல் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக, அதன் இடத்தில் ஒரு இரத்த மற்றும் பிளாஸ்மா நன்கொடை முகாம் அமைக்கப்படும் என்று லால்பாக் ராஜா கணேஷ் உத்ஸவ் மண்டல் தெரிவித்துள்ளது.

லால்பாக் ராஜா கணேஷ் உத்ஸவ் மண்டல் மேலும், கணேஷ் உத்ஸவத்தை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு பதிலாக, லால்பாக் ராஜா மண்டல் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கும் என்று என்று கூறியுள்ளார்.

1934’ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்த இந்த விழா 86 ஆண்டுகளில் முதல் முறையாக மும்பையின் லால்பாக் ராஜ கணேஷ் உத்ஸவம் (லால் பாக் கா ராஜா – லால் பாக் மன்னர் என்றும் அழைக்கப்படுகிறார்) இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது நடைபெறாது.

ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது, நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் லால்பாக் ராஜ கணேஷ் உத்ஸவத்தை பார்வையிட்டு விநாயகருக்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

10 நாள் நீடித்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது லால்பாக் ராஜ கணேஷ் உத்ஸவ் 24×7’இல் பக்தர்களின் வருகைக்காக திறக்கப்படுவது வழக்கம்.

பிரபல நபர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பொது நபர்கள், அமித் ஷா முதல் முகேஷ் அம்பானி முதல் அமிதாப் பச்சன் வரை பிரபலங்கள், மும்பையின் லால்பாக் ராஜ கணேஷ் உத்ஸவத்திற்கு விநாயகர் பிரார்த்தனை செய்ய வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply