ஜனவரி 8 முதல் பிரிட்டனுக்கு விமான சேவை தொடங்குவது உறுதி..! மத்திய அரசு திட்டவட்டம்..!

1 January 2021, 8:54 pm
flights_updatenews360
Quick Share

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான விமானங்கள் ஜனவரி 8 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தெரிவித்தார்.

ஒரு அறிக்கையில், பூரி கூறுகையில், “2021 ஜனவரி 8’ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான விமானங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளின் விமானங்களுக்காக மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இருந்து வாரத்திற்கு 15 விமானங்களுக்கு மட்டும் 23 ஜனவரி வரை அனுமதி வழங்கப்படும்.” எனக் கூறினார்.

சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) விரைவில், இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதலை வெளியிடும் என்றும் பூரி குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் கொரோனா வைரஸின் புதிய வடிவம் தோன்றிய பின்னர் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிக தடையை, இந்தியா டிசம்பர் 21 அன்று விதித்தது. விமானங்களை நிறுத்தி வைப்பது டிசம்பர் 22 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்து டிசம்பர் 31 வரை தொடரும் என்று அரசாங்கம் அப்போது தெரிவித்தது

பின்னர், கொரோனா வைரஸின் புதிய தொற்றுநோயைப் பற்றிய எச்சரிக்கையின் மத்தியில், பிரிட்டனுக்கு விமானங்களை இயக்க ஜனவரி 7 வரை இந்திய அரசு தடையை நீட்டித்தது.

இந்நிலையில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜனவரி 8 முதல் விமான சேவை தொடங்குவது உறுதி என்றும்,  ஜனவரி 23 வரை வெறும் 15 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவித்துள்ளார்.

Views: - 0

0

0