ராணுவத் தளபதியைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுச் செயலாளர் நேபாளப் பயணம்..!

11 November 2020, 5:45 pm
India_MEA_Secretary_UpdateNews360
Quick Share

இந்த ஆண்டு தொடக்கத்தில் நில உரிமைகோரல் தொடர்பாக, இந்திய-நேபாள உறவுகள் மோசமடைந்த நிலையில், இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக வெளியுறவு செயலாளர் ஹர்ஸ்;ஷ்ரிங்லா இந்த மாதம் நேபாளத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் நேபாளத்திற்கு இந்திய இராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நாரவனே மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தின் பின்பு ஷ்ரிங்லாவின் பயணம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நவம்பர் 6’ம் தேதி நாரவனே உடனான சந்திப்பின் போது, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.

ஷ்ரிங்க்லாவின் வருகை குறித்து இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால் நவம்பர் 26-27 அன்று அவரின் நேபாள பயணம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லடாக் செக்டரில் இந்தியா-சீனா எல்லை நிலைப்பாட்டின் பின்னணியில் இரு நாடுகளின் அதிகாரிகளும் ரகசியமாக பேசி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ள நேபாளத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியா எச்சரிக்கையாக உள்ளது.

தொற்றுநோய் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இது ஷ்ரிங்லாவின் ஐந்தாவது வெளிநாட்டு பயணமாகும். இந்த வாரம் மாலத்தீவுக்கு விஜயம் செய்த அவர், பக்கத்திலுள்ள பங்களாதேஷ் மற்றும் மியான்மருக்கும் சென்றுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், ஷ்ரிங்க்லா பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 23

0

0

1 thought on “ராணுவத் தளபதியைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுச் செயலாளர் நேபாளப் பயணம்..!

Comments are closed.