பாலியல் பலாத்காரம் நடக்கவில்லையா..? தடயவியல் அறிக்கையை வெளியிட்ட கூடுதல் டிஜிபி..!

Author: Sekar
1 October 2020, 4:29 pm
prashant_kumar_ADG_UP_UpdateNews360
Quick Share

சாதி அடிப்படையிலான பதற்றத்தைத் தூண்டுவதற்காக சிலர் ஹத்ராஸ் கும்பல் கற்பழிப்பு விஷயத்தை திரித்து பரப்பி வருவதாக உத்தரபிரதேச கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டிஜிபி எச்சரித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி, கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்றும், தடயவியல் அறிக்கையில் மாதிரிகளில் விந்து கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

முன்னதாக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். 19 வயதான அவர் செவ்வாயன்று டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் பலியானார்.   

ஹாத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவரின் இறுதி சடங்குகள் நேற்று அதிகாலையில் தனது சொந்த இடத்தில், இளம் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுடன் அவசர அவசரமாக நடத்தப்பட்டன.

இந்த வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு குற்றத்தை விசாரிக்க யோகி ஆதித்யநாத் அரசாங்கம் மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி உ.பி. முதல்வரை ராஜினாமா செய்யக் கோரி போராட்டங்களை முடுக்கிவிட்டது.

தலித் பெண்ணுக்கு எதிரான கொடூரமான குற்றம் உ.பி.யின் அரசியலை சூடாக்கியுள்ளது, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, உத்தரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக விசாரணைக் குழுக்கள் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், இதை அரசியல்படுத்தக்கூடாது என்றும் கூறினார்.

இந்நிலையில் ஊடகங்களுடன் பேசிய கூடுதல் டிஜிபி, “அரசியல் காரணங்களுக்காக பதற்றத்தை அதிகரிக்க முயற்சிப்பவர்கள் அதை செய்யக்கூடாது. முடிவுகளை விரைவில் காண்பீர்கள்.” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே இன்று பிற்பகலில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கிரேட்டர் நொய்டாவில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்க ஹாத்ராஸுக்கு செல்லும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Views: - 48

0

0