தெலங்கானாவில் எருமைகள் தாக்கியதில் காயமடைந்த சிறுத்தை: பத்திரமாக மீட்ட வனத்துறையினர்..!!

11 June 2021, 5:13 pm
Quick Share

தெலங்கானா மாநிலத்தில் எருமைகள் தாக்கியதால் காயமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள குருகபல்லி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாட்டை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது.

அப்போது அங்கிருந்த மற்ற எருமை மாடுகள் சுற்றிவளைத்து சிறுத்தையை முட்டி தள்ளி மிதித்துள்ளது. மாடுகள் மிதித்ததால் எழ முடியாமல் சிறுத்தை தவித்துள்ளது. இதனை கண்ட விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்ற கிராம மக்கள் தண்ணீர் வழங்கி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காயமடைந்த சிறுத்தையை ஹைதராபாத் மிருககாட்சி சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Views: - 165

0

0