அத்தை மகளின் காதலனை சுட முயன்ற முன்னாள் ராணுவ வீரர்!!
24 August 2020, 5:19 pmஆந்திரா : அத்தை மகளை காதலித்த வாலிபரை கை துப்பாக்கியால் சுட முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதர நெல்லூர் மண்டலம் கோட்டாகாரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துரைராஜ். அதே ஊரை சேர்ந்த வாலிபர் விஜயகுமாரும் துரை ராஜ் அத்தை மகளும் காதலித்து வந்தனர்.
ஆனால் துரைராஜ் தன்னுடைய அத்தை மகளின் காதலை ஏற்று கொள்ள விருப்பமில்லை. எனவே விஜயகுமார் வீடு இருக்கும் பகுதிக்கு கத்தி, கைத்துப்பாக்கி ஆகியவற்றுடன் சென்ற துரைராஜ் விஜயகுமார் வீட்டு முன் நின்று கொண்டு அவரை வெளியில் வருமாறு சத்தம் போட்டார்.
அந்தப் பகுதியில் வசிக்கும் உள்ளூர் பொதுமக்கள் துரைராஜ் பிடித்து வீட்டுக்குள் அடைத்து வைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார் துரைராஜ் கைதுசெய்து அவரிடமிருந்த கைத்துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.