அசாமின் முன்னாள் முதலமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்…!!

18 April 2021, 9:35 pm
Quick Share

கவுகாத்தி: அசாமின் முன்னாள் முதலமைச்சர் பூமிதர் பர்மான் இன்று உடல்நல குறைவால் காலமானார்.

அசாமின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் பூமிதர் பர்மான். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த அவர் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதில் சிகிச்சை பலனின்றி இன்று உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. இதனை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 3 நாட்கள் இரங்கல் தெரிவிக்கப்படும் என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Views: - 85

0

0