பிரபல முன்னாள் கால்பந்து வீரர் மரடோனா மறைவு : கேரளாவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

26 November 2020, 5:21 pm
Maradona_in_Kerala - updatenews360
Quick Share

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த மாரடோனா கால்பந்து ரசிகர்களின் ஆதர்சன நாயகனாக திகழ்ந்தவர் ஆவார். அர்ஜெண்டினா அணி 1960- ஆம் ஆண்டு கால்பந்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழந்தவர் மாரடோனா.

அர்ஜென்டினா தேசிய அணியின் தற்போதைய மேலாளராக இருந்த இவர், எப்போதைக்குமான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். நூற்றாண்டின் சிறந்த ஃபிஃபா வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.

1997 ஆம் ஆண்டில் தனது 37 வது பிறந்தநாள் முதல் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கொக்கைன் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக மோசமான உடல்நிலை மற்றும் அதிகப்படியான உடல் எடையினால் பாதிக்கப்பட்டார். மேலாண்மையில் அவருக்கிருந்த முன்னனுபவம் குறைவு எனினும், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்டில் சிகிச்சையில் இருந்த மரடோனாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

நான்கு உலக கோப்பையில் பங்கேற்ற இவர், 1986ஆம் ஆண்டு இவரது தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றது. மேலும் அந்த போட்டியில் சிறந்த வீரராக தேர்வானார். இவரது மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மரடோனாவின் மறைவிற்காக 2 நாட்கள் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- உலகம் முழுவதும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு மரடோனாவின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது இந்த மறைவை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த சூழலில் இன்று முதல் 2 நாள் துக்கத்தை அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, எனத் தெரிவித்தார்.

மரடோனாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் மறைவை நம்ப முடியாத நிலையில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், இன்று முதல் இரண்டு நாள் துக்கத்தை அனுசரிக்க மாநில விளையாட்டுத் துறை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் தனது சிறந்த கால்பந்து வீரனை இழந்து தவிக்கிறார்கள்,” என்று மரடோனாவின் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Views: - 26

0

0