ஜம்மு காஷ்மீர் நில முறைகேட்டில் சிக்கிய முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்..! சிபிஐ வழக்குப் பதிவு..!

26 November 2020, 5:25 pm
CBI_UpdateNews360
Quick Share

ரோஷ்னி நில முறைகேட்டில் முன்னாள் ஜம்மு காஷ்மீர் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான தாஜ் மோஹி உத் தின் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணையை கையகப்படுத்திய சிபிஐ தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரில் பெயர் சூட்டப்பட்ட முதல் அரசியல்வாதி தாஜ்மோஹி உத் தின் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்களுக்கு முன்பு, இவர் வடக்கு காஷ்மீரின் யூரி செக்டரின் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில குடியிருப்போருக்கு நில உரிமையை வழங்கும் சட்டம் எனும் ரோஷ்னி சட்டம், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியுள்ள ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் அனைத்து ஆவணங்களையும் புகார்களையும் சிபிஐக்கு வழங்குமாறு, மாநில ஊழல் தடுப்பு அமைப்பை கேட்டுக்கொண்டது.

கடந்த மார்ச் 2014’இல், சிஏஜி இந்த நில மோசடியின் மதிப்பு ரூ 25,000 கோடி எனக் குறிப்பிட்டதை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2016’இல் மாநில ஊழல் தடுப்பு அமைப்பால் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை தற்போது சிபிஐ கையகப்படுத்தி விசாரணை நடத்தி வருகிறது.

Views: - 19

0

0