சுதந்திரம் என்பது எது தெரியுமா…? டுவிட்டரில் அர்த்தம் சொன்ன ப. சிதம்பரம்

15 August 2020, 12:13 pm
p_chidambaram_updatenews360
Quick Share

டெல்லி: விடுதலை என்பது அச்சம், வறுமை, அடக்கு முறையிலிருந்து விடுபடுவதே என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 74வது சுதந்திர தின கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா தடுப்பூசி விரைவில் மக்களுக்கு அளிக்கப்படும். இந்த போரில் நமக்கு நிச்சய வெற்றி கிடைக்கும் என்று பேசினார். தமிழகத்தில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியற்றினார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:

எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு. சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை. எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.