கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சர் பலி…! முதலமைச்சர் அதிர்ச்சி

1 August 2020, 9:05 pm
Quick Share

ஐதராபாத்: ஆந்திராவில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாணிக்யாலா ராவ் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 59.

கடந்த மாதம் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய போது, கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து எலுருவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மூச்சு விட சிரமம் ஏற்பட்டதால் விஜயவாடாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இறுதி சடங்குகள் முழு மரியாதைகளுடன் செய்யுமாறு மேற்கு கோதாவரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கு தேசம் தலைவர் என். சந்திரபாபு நாயுடுவும் முன்னாள் அமைச்சரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அமைச்சராக ராவ் இருந்த போது கோயில்களின் வளர்ச்சி மற்றும் அர்ச்சகர்களின் நலனுக்காக பணியாற்றினார் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

Views: - 44

0

0