ககன்யான் : லட்சிய மனித விண்வெளி பயணம்..! இந்திய வீரர்களுக்கு மீண்டும் பயிற்சி ஆரம்பம்..!

23 May 2020, 7:21 pm
Gaganyan_UpdateNews360
Quick Share

இந்தியாவின் முதல் மனிதர்கள் கொண்ட விண்வெளிப் பயணமான ககன்யானுக்குப் பட்டியலிடப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள் கொரோனா பயம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர், ரஷ்யாவில் தங்கள் பயிற்சியை மீண்டும் தொடங்கினர்.

ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஒரு அறிக்கையில், “ககாரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையம் (ஜி.சி.டி.சி) கிளாவ்கோஸ்மோஸ், ஜே.எஸ்.சி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் மனித விண்வெளிப் பயணம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளித்தது.” என்று கூறியுள்ளது. நான்கு இந்திய விண்வெளி வீரர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர்.

“ஜி.சி.டி.சி தொற்றுநோய்க்கு எதிரான விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதன்படி அனைத்து ஜி.சி.டி.சி வசதிகளிலும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூக இடைவெளிகள் பின்பற்றப்படுகின்றன மற்றும் அங்கீகரிக்கப்படாத நபர்களின் இருப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களும் விண்வெளி வீரர்களும் மருத்துவ முககவசங்கள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.” என்று அது மேலும் கூறியது.

இந்தியக் கொடியைத் தாங்கிய விண்வெளி உடையை அணிந்த விண்வெளி வீரர்களின் படத்தையும் ரோஸ்கோஸ்மோஸ் ட்வீட் செய்துள்ளது.

நான்கு இந்திய விமானப்படை போர் விமானிகள் தற்போது மாஸ்கோவில் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் ககன்யான் திட்டத்திற்கான சாத்தியமான நபர்களாக இருக்க வாய்ப்புள்ளது.

10,000 கோடி ரூபாய் மதிப்பிலான லட்சியத் திட்டம் 2022’ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் 75வது சுதந்திர நிறைவு ஆண்டாகும். மேலும், இந்த வாரம், ரோஸ்கோஸ்மோஸின் ஜி.சி.டி.சி வல்லுநர்கள் வானவியலின் அடிப்படைகள், மனிதர்கள் கொண்ட விண்கலக் கட்டுப்பாட்டின் அடிப்படைகள் குறித்த தத்துவார்த்த வகுப்புகளைஇந்திய விண்வெளி வீரர்களுக்கு வழங்குகிறார்கள்.

கிளாவ்கோஸ்மோஸ் மற்றும் இஸ்ரோவின் மனித விண்வெளி மையம் ஆகியவற்றுக்கு இடையேயான இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் 2019 ஜூன் 27 அன்று கையெழுத்தானது, மேலும் ரஷ்யாவில் அவர்களின் பயிற்சி பிப்ரவரி 10, 2020 அன்று தொடங்கியது.

மார்ச் மாத இறுதியில் இருந்து, கொரோனா நோய்த்தொற்று வெடித்ததால், இந்திய விண்வெளி வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இந்திய விண்வெளி வீரர்களுக்கு மீண்டும் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply