டோல் கேட்டில் நான்கு தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்..! ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்..!
19 November 2020, 10:35 amஇன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா டோல் பிளாசா அருகே நடந்த மோதலில் ஜெய்ஷ் இ முகமது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரோட்டாவின் பான் பகுதியில் உள்ள டோல் பிளாசா அருகே அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.
டோல் பிளாசா அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் வாகனத்தில் ஒளிந்து கொண்டிருந்தனர்.
“இது ஒரு ஜேஇஎம் குழு. அவர்கள் நேற்று இரவு சம்பா செக்டர் வழியாக ஊடுருவினர். பயங்கரவாதிகள் டோல் பிளாசாவில் நிறுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் ஒரு கையெறி குண்டு வீசினர். இராணுவமும் சிஆர்பிஎபும் இந்த நடவடிக்கையில் இணைந்தன” என்று ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தார்.
என்கவுண்டர் காரணமாக ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. நக்ரோட்டா மற்றும் உதம்பூர் இடையே எந்த போக்குவரத்து இயக்கமும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில், தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) ஒரு குழு விரைவில் என்கவுன்டர் இடத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் குழு மீது பயங்கரவாதிகள் நடத்திய கையெறி தாக்குதலில் குறைந்தது 12 பொதுமக்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் புல்வாமாவின் ககாபோரா பகுதியில் நடந்துள்ளது.
குண்டு சரியான இலக்கை எட்டாமல் சாலையில் வெடித்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேட்டை தொடங்கப்பட்டது.
முன்னதாக நேற்று, டெல்லியின் சராய் காலே கானில் இருந்து ஜேஇஎம் பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1 thought on “டோல் கேட்டில் நான்கு தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்..! ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்..!”
Comments are closed.