குட்டையில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் உட்பட 4 பேர் பலி : ஆந்திராவில் சோகம்!!

4 February 2021, 8:06 pm
4 Dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : துணி துவைக்க சென்று விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் குட்டையில் விழுந்த நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற தாய் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம் சிம்பநகல்லு கிராமத்தைச் சேர்ந்த முனிலால் பிரசாத்தின் என்பவரின் மனைவி ருக்மிணி (வயது 30), அவர்களது இரண்டு மகள்களான ஆர்த்தி (வயது 8), கீர்த்தி (வயது 6) மற்றும் முனிலால் பிரசாத் தம்பி மனைவி ராஜேஸ்வரி (வயது 26) ஆகியோர் இன்று காலை துணிகளை துவைக்க கிராமத்திற்கு அருகிலுள்ள குட்டைக்கு சென்றனர்.

அப்போது விளையாடி கொண்டுருந்த கீர்த்தி தண்ணீர் குட்டையில் தவறி விழுந்தார். இதனை பார்த்த தாய் ருக்மணி தண்ணீரில் குதித்து காப்பாற்ற முயன்றார். ஆனால் குட்டையில் சேற்றில் சிக்கி அவரும் உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் குழந்தையை மீட்க ருக்மணி, கீர்த்தி இருவரும் வராததால் ராஜேஸ்வரியும் தண்ணீரில் குதித்தார்.

ராஜேஸ்வரியின் தண்ணீரில் குதித்த நிலையில் அவரும் இறந்தார். இதனை பார்த்துக் கொண்டிருந்த ஆர்த்தியும் தண்ணீரில் விழுந்த உயிரிழந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் நான்குபேரும் வராததால் சம்பவ இடத்திற்கு வந்த முனிலால் பிரசாத் தீயணைப்பு துறைதுறையினருக்கு தகவல் தெரிவித்தும் கிராம மக்களுடன் இணைந்து குட்டையில் தேடி பார்த்தனர்.

அப்போது குட்டையில் சேற்றில் சிக்கிய 4 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் குட்டையில் தவறி விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 21

0

0