திருப்பதியில் இலவச டோக்கன் ரத்து : தேவஸ்தானம் அறிவிப்பு!!

13 September 2020, 5:23 pm
Tirupati Temple - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதியில் புரட்டாசி மாதத்தால் கோவிலுக்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு மற்றும் கொரோனா பரவல் அதிகரிப்பால் இலவச தரிசன டோக்கன் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளொன்றிற்கு 12,000 எண்ணிக்கையிலான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் தற்போது ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்களை திருப்பதியில் வழங்கும் நடைமுறை இம்மாத இறுதி வரை தற்காலிகமாக தேவஸ்தான நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இம்மாதம் 23ஆம் தேதி துவங்கி புரட்டாசி மாதம் நடைபெற உள்ளது. புரட்டாசி மாதத்தில் அதிக அளவிலான பக்தர்கள் விரதம் இருந்து திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபடுவது வழக்கம்.

திருப்பதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே இலவச தரிசனத்திற்காக அதிக அளவில் பக்தர்கள் வருவதை தவிர்ப்பதற்காகவே இலவச தரிசன நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் நாளொன்றிற்கு 9000 எண்ணிக்கையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டன. அதே நேரத்தில் 3 ஆயிரம் பக்தர்கள் தினமும் ஏழுமலையான் இலவசமாக தரிசிக்க டோக்கன்கள் வழங்கப்பட்டன.

தற்போது ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் மொத்த எண்ணிக்கையை சமன் செய்யும் நோக்கில் 300 ரூபாய் டிக்கெட்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 9 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Views: - 11

0

0