அதிர்ஷ்டத்தில் விளையாடிய நண்பர்கள் : துபாய் ஊழியருக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு.. மறுநாளே நடந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 7:35 pm
Lottery Prize - Updatenews360
Quick Share

கேரளா : துபாயில் பணியாற்றி வரும் சமையல் உதவியாளருக்கு லாட்டரி பரிசு விழுந்ததாக நினைத்த நிலையில் அடுத்த நாளே ஏமாறிப்போனது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த சைதல்வி என்பவர் துபாயில் உள்ள உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோட்டில் இருக்கும் அவருடைய நண்பரிடம் கூகுள் பே மூலம் பணம் அனுப்பி ஓணம் பம்பர் லாட்டரி சீட்டை வாங்க கூறியிருக்கிறார்.

பின்னர் நண்பரும் கடையில் இருந்த கடைசி சில டிக்கெட்டுகளில் ஒன்றை வாங்கி சைதல்வியின் வாட்ஸ் நம்பருக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து கடந்த செப்.19 ஆம் தேதி லாட்டரி சீட்டின் முடிவு வெளியானது. அதில் சைதல்விக்கு நண்பர் அனுப்பிய டிக்கெட் நம்பருடன் ஒப்பிட்டு பார்த்த போது ரூ.12 கோடி பரிசு விழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து மகிழ்ச்சியடைந்த சைதல்வி மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ஷ்டத்தை கொண்டாடி தீர்த்தனர். ஆனால் அடுத்த நாளே சைதல்வியின் கனவு சுக்குநூறாக நொறுங்கியது.

லாட்டரி பரிசான ரூ.12 கோடிக்கு ஆட்டோ ஓட்டுநருக்கே சொந்தம் என்பது தெரியவந்தது. சைதல்வியின் நண்பர் விளையாட்டாக பரிசு விழுந்த சீட்டின் நகலை அனுப்பியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து துபாயில் உள்ள சைதல்வி பெரிய ஏமாற்றம் அடைந்தார்.

இந்த நிலையில் பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுநருக்கு வருமான வரி, ஏஜெண்ட் கமிஷன் போக ரூ.7.56 கோடி கிடைத்துள்ளது. இதை வைத்து தன்னுடைய கடனை அடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 254

0

0