விவசாயிகளுக்காக கேரளாவில் இருந்து காஷ்மீருக்கு சைக்களில் ஒரு சாகச பயணம்!

18 January 2021, 8:25 am
Quick Share

குடியுரிமை சட்டத்திற்க எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, 22 வயது கேட்டரிங் மாணவர் ஒருவர் கேரளாவில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் சாதனை பயணம் கிளம்பி உள்ளார். விவசாயிகள் போராட்டத்துக்காக பணம் திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான அவர்களின் பேச்சுவார்த்தை பல சுற்றுகளாக நடந்து வரும் நிலையில், அதில் ஒரு சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. கடுங்குளிரிலும், கொட்டும் மழையிலும், 50 நாட்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கேரளாவை சேர்ந்த கேட்டரிங் மாணவரான ஜிபின் ஜார்ஜ், கேரளாவில் இருந்து டில்லிக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் போது, விவசாயிகள் போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்காக பணம் திரட்டவும் முடிவு செய்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை மட்டும் ஒரு பையில் சுமந்து கொண்டு, சைக்கிளில் கிளம்பியுள்ள அவர், டில்லி எல்லையில் 3 நாட்கள் போராட முடிவு செய்துள்ளார். விவசாயிகள் நம் தேசத்தின் முதுகெலும்புகள் என தெரிவித்துள்ள அபு, அவர்களுக்கு தேவை நமது மரியாதை; பரிதாபம் அல்ல எனவும், தென்னிந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை எனவும் அவர் கவலை கொண்டுள்ளார்.

அவரது பயணம், மதுரை, பெங்களூரு, ஹைதராபாத், சண்டிகர், நாக்பூர், ஆக்ரா, புது தில்லி, தர்மசாலா, குல்மார்க் மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக அவர் பயணம் மேற்கொள்கிறார்.

Views: - 4

0

0