குஜராத் – காந்திநகர் மாநகராட்சி தேர்தல்: பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்..!!

Author: Aarthi Sivakumar
3 October 2021, 12:30 pm
Quick Share

குஜராத்: காந்திநகர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்.

குஜராத் மாநிலம் காந்திநகர் மாநகராட்சியின் 11 வார்டுகளில் 44 கவுன்சிலர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, நகரின் ராய்சன் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மாநகராட்சி தேர்தலுக்கு வாக்களித்தார்.

Views: - 446

0

0