தாயை பார்க்க ஆட்டோவில் சென்ற இளம்பெண்…வழிமறித்து கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: கொடூர கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!!

Author: Rajesh
5 May 2022, 12:16 pm
Rape_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசம்: ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள தானேபூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை பார்ப்பதற்காக உறவினரின் வீட்டுக்கு கடந்த 23ம் தேதி காலை சென்றுள்ளார்.

பின்னர், இரவில் ஆட்டோ மூலமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 10 மணியளவில் அந்த ஆட்டோவை திடீரென 4 இளைஞர்கள் மறித்துள்ளனர். இதையடுத்து, அந்த இளம்பெண்ணை ஆட்டோவில் இருந்து தரதரவென இழுத்து சென்ற அவர்கள், சாலையோரத்தில் இருந்த புதர் பகுதியில் வைத்து அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினர்.

இதனைத் தொடர்ந்து, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது உறவினர்களுக்கு அந்தப் பெண் போனில் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, அவரை அவரது உறவினர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில், இதுகுறித்து அந்தப் பெண் தற்போது தானேபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 723

0

0