ஊரடங்கு முடிவுக்காக காத்திருந்த கும்பல் : தயார் நிலையில் வைக்கப்பட்ட செம்மரங்களை கைப்பற்றிய போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2021, 2:39 pm
Police Catch Redwood - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஊரடங்கு முடிந்தவுடன் கடத்துவதற்கு தயார் நிலையில் வெட்டி வைக்கப்பட்டிருந்த 348 செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது தமிழ்நாடு ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிந்தபின் கடத்துவதற்காக திட்டமிட்டு வெட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 348 செம்மரங்களை திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

சித்தூர் மாவட்டம் வடமால்பேடை அருகே உள்ள வனப்பகுதியில் கடத்துவதற்கு தயார் நிலையில் பெரும் அளவில் செம்மரங்கள் சேகரித்து வைக்கப்பட்டு இருப்பது பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 348 செம்மரக்கட்டைகளை கைப்பற்றி பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 323

0

0