விரைவில் திருமணம்? திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 8:54 am
Nayan Vignesh shivan -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.

இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனத்துக்கு சென்றனர். சுவாமி தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

கோவிலுக்கு வெளியே வந்த அவர்கள் ரசிகர்கள் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கவில்லை. அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

Views: - 275

1

0