நண்பரின் இரண்டு வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்..! மரண தண்டனை வழங்கியது நீதிமன்றம்..!
21 January 2021, 11:13 amஉத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் இரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றம் நடந்த ஒரு மாதத்திற்குள் இந்த தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 21’ஆம் தேதி கவி நகர் பகுதியில் சாலையோர புதர்களுக்கு பின்னால் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு வக்கீல் உத்கர்ஷ் வாட்ஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த வழக்கில் சிறுமியின் தந்தையின் நெருங்கிய நண்பராக இருந்த சந்தனுக்கு சிறப்பு போக்ஸோ நீதிமன்ற நீதிபதி மகேந்திர ஸ்ரீவாஸ்தவா மரண தண்டனை விதித்தார். பத்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வாட்ஸ், தீர்ப்பை 29 நாட்களுக்குள் பெற்றதை ஒரு முக்கிய அடையாளமாக விவரித்தார்.
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருந்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இந்த வழக்கு அரிதிலும் அரிதான ஒன்றாகும்.” என்று நீதிபதி குறிப்பிட்டார். “பாலியல் எண்ணம் கூட புரியாத இரண்டரை வயது சிறுமிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.” என நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் நடந்த உடனேயே குற்றவாளி கைது செய்யப்பட்டு, டிசம்பர் 29’ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு அவினாஷ் குமார் தெரிவித்தார்.
0
0