விநாயகருக்கு படைக்கப்பட்ட 21 கிலோ எடைகொண்ட ராட்சத லட்டு: ரூ.18.90 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 11:18 am
Laddu Sales -Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஹைதராபாத்தில் விநாயகருக்குப் படைக்கப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டு 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது.

மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெறுவது போல் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், செகந்திராபாத் நகரங்களிலும் விநாயகர் சதுர்த்தி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஐதராபாத்தில் உள்ள கைரதாபாத் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 60 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் விநாயகர் சிலைகளை சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்து கணபதி நவராத்திரி என்ற பெயரில் 9 நாட்கள் பூஜை செய்து பின்னர் ராட்சத கிரேன்கள் மூலம் தூக்கி சென்று விசர்ஜனம் செய்வது வழக்கம்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஐதராபாத் நகரில் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் கணபதி உற்சவ கமிட்டி ஏற்பாட்டின் பேரில் நடத்துவது வழக்கம். தெலுங்கானா மாநில அரசு எவ்விதமான நிபந்தனையும் விதிக்கா நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கடந்த ஆண்டு முதல் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நவராத்திரி உற்சவத்தை வானம் பத்தி உற்சவ கமிட்டி நடத்துகிறது.

அதேபோல் ஐதராபாத்தில் உள்ள பாலாபூர், கைரதாபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு ஒன்பது நாட்களும் பிரம்மாண்ட அளவில் லட்டு பிரசாதம் படையல் இடப்படும்.

அவ்வாறு படையல் இடப்படும் லட்டு பிரசாதம் பின்னர் ஏலத்தில் விற்பனை செய்யப்படும். இன்று பாலாபூர் கணபதிக்கு படையிலிடபட்ட 21 கிலோ லட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. அப்போது மர்ரி ஷெஷாங் ரெட்டி என்பவர் பாலப்பூர் கணபதிக்கு படைக்கப்பட்ட லட்டை 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்.

18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கணபதி லட்டு பிரசாதத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்க இருப்பதாக மர்ரி ஷெஷாங் ரெட்டி கூறினார். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பாலாப்பூர் கணபதி லட்டு ஏல விற்பனை நடைபெறுகிறது.

1994ஆம் ஆண்டு 450 ரூபாய்க்கு பாலாப்புர் கணபதி லட்டு விற்பனையானது. 1995ஆம் ஆண்டு 4500 ரூபாய்க்கும், 1996 ஆம் ஆண்டு 18 ஆயிரம் ரூபாய்க்கும், 1997ஆம் ஆண்டு 28 ஆயிரம் ரூபாய்க்கும்,1998-ஆம் ஆண்டு 51 ஆயிரம் ரூபாய்க்கும்,1999 ஆம் ஆண்டு 65 ஆயிரம் ரூபாய்க்கும், 2000 ஆண்டில் 66 ஆயிரம் ரூபாய்க்கும், 2001 ஆண்டில் 85 ஆயிரம் ரூபாய்க்கும், 2002ம் ஆண்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும், 2003 ம் ஆண்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும்,2004 ஆண்டு 2 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் 2005 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும், 2006 ஆவது ஆண்டில் 3 லட்ச ரூபாய்க்கும், 2007ல் 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும், 2008 இல் 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும், 2009 ஆம் ஆண்டு 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும், 2010 ஆண்டு 5 லட்சத்தி 35 ஆயிரம் ரூபாய்க்கும், 2011 ஆண்டு 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும், 2012ஆம் ஆண்டு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும், 2013 ஆண்டு 9 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் 2014 ஆண்டு 9 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும், 2015 ஆம் ஆண்டு 10 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கும், 2016 ஆவது ஆண்டு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும், 2017 ஆம் ஆண்டு 15 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும், 2018 ஆண்டு 16 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கும், 2019ஆம் ஆண்டு 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும், அதனை தொடர்ந்து இந்த ஆண்டு 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆண்டு ஏலம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Views: - 193

0

0