நீச்சல் குளத்தில் மிதந்த சிறுமியின் சடலம்.. அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி : அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 1:41 pm
Apartment
Quick Share

நீச்சல் குளத்தில் மிதந்த சிறுமியின் சடலம்.. அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி : அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்!!

பெங்களூரு வர்தூர்-குஞ்சூர் சாலையில் உள்ள பிரஸ்டீஜ் லேக்சைட் ஹாபிடேட் அடுக்குமாடி குடியிருப்பு, நேற்று முன்தினம் இரவு வழக்கமான அமைதியுடன் இருந்தது. சிறுவர்கள் சிலர் ஆங்காங்கே விளையாடிக்கொண்டிருந்தனர்.

இரவு 8 மணி இருக்கும். அப்பார்ட்மென்ட்டின் நீச்சல் குளம் அருகே இருந்து கூச்சல் சத்தம் எழுந்திருக்கிறது. சில நிமிடங்கள் கழித்துதான் பெரியர்கள் சிலர் நீச்சல் குளம் அருகே வந்திருக்கின்றனர்.

அப்போது அவர்கள் குளத்தில் சிறுமி சடமலாக மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வர்தூர் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் சிறுவர்கள் திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாரா விதமாக 10 வயத சிறுமி மன்யா நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளார்.

உடனே சிறுவர்கள் அலறி சத்தம்பபோட, பெற்றோர்கள் பார்ப்பதற்குள் சிறுமி உயிரிழந்தது. ஆனால் குழந்தையின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

நீச்சல் குளத்தில மின் கசிவு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு நடந்துள்ளது எனவும், அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்பாளர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளனர்.

  • Wayand Shruti இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!
  • Views: - 400

    0

    0