மகேந்திர சிங் தோனிக்கு பாரத் ரத்னா விருது..? காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை..!

17 August 2020, 12:45 pm
ms_dhoni_retirement_updatenews360
Quick Share

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. இன்று அவருக்கு, பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

“எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட்டை அதிக உயரத்திற்கு கொண்டு சென்று உலகெங்கிலும் உள்ள இந்தியர்களை பெருமைப்படுத்தினார். எனவே அவருக்கு மிக உயர்ந்த விருதான பாரத் ரத்னா வழங்கப்பட வேண்டும்.” என்று போபால் எம்.எல்.ஏ பி.சி சர்மா கூறியுள்ளார்.

இது தொடர்பாக சர்மா வெளியிட்டுள்ள டிவீட்டில், “உலகெங்கிலும் இந்திய கிரிக்கெட்டின் வெற்றியை நிறுவிய நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி, பாரத ரத்னாவுடன் கௌரவிக்கப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுடன் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ, “எம்.எஸ். தோனி கிரிக்கெட்டில் நாட்டின் பெயரை உயர்த்தியுள்ளார். எனவே அவருக்கு மிக உயர்ந்த மரியாதை வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மகேந்திர சிங் தோனி உலக கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். 2011’ல் ஐ.சி.சி உலகக் கோப்பையை வென்று, 2007’ல் போட்டியின் முதல் பதிப்பில் இந்தியாவை ஐ.சி.சி உலக டி 20 வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

இங்கிலாந்தில் 2013’இல் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்ற நிலையில், தோனி கேப்டனாக இருந்தார். மேலும் மூன்று ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி ஆவார்.

39 வயதான அவர், 195 ஸ்டம்பிங் செய்து விக்கெட் கீப்பிங்கில் இமாலய சாதனையைப் படைத்துள்ளார். 

முன்னதாக 2014 டிசம்பரில், தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு தனது டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இருப்பினும், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் ஐபிஎல் 2020’இல், சி.எஸ்.கே. அணியின் சார்பாக தோனி மீண்டும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 101

0

0