ஞானவாபி மசூதி விவகாரம்… ரிப்போர்ட் லீக்? வாரணாசி நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2022, 6:16 pm
Gnanavapi masjid - Updatenews360
Quick Share

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்திரபிரதேசம் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. அதனை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபடுவதற்கு அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், மசூதி வளாகத்திற்குள் கள ஆய்வு செய்யவும் அதை வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மசூதி வளாகத்துக்குள் கள ஆய்வு செய்தபோது சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மசூதி நிர்வாகம் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, ஆய்வு விவரங்களை கசிய விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 669

0

0