கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார் கோவா முதலமைச்சர்..!!

3 March 2021, 2:12 pm
goa - updatenews360
Quick Share

புதுடெல்லி: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது.

2வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டக் கொண்டனர்.

இதன்படி நேற்று மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அமைச்சர் ஜிஜேந்திர சிங், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி., பரூக் அப்துல்லா, டிஆர்எஸ் எம்.பி., கே. கேசவராவ், அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று செலுத்திக்கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட முன்வர வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். இது கோவாவிலிருந்து கொரோனாவை ஒழிக்க உதவும் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனிடையே முன்னாள் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலே கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.

Views: - 2

0

0