சாதி, மதங்களை கடவுள் உருவாக்கவில்லை.. பூசாரிகள் தான் காரணம் : ஆர்எஸ்எஸ் தலைவர் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 1:56 pm

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மும்பையில் நடைபெற்ற இந்து மதக் குருக்களில் ஒருவரான சிரோமணி ரோஹிதாஸின் 647-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் கூறியதாவது, மனசாட்சியும், உணர்வும் ஒன்றுதான். அதன் மீதான கருத்துகள்தான் வேறுபடுகின்றன. வாழ்வதற்காக நாம் சம்பாதிக்கும்போது நமக்கு சமுதாயத்தின் மீதும் பொறுப்பு இருக்கிறது.

ஒவ்வொரு பணியும் சமுதாயத்தின் நன்மைக்காக இருக்கும்போது, அவை சிறியதா, பெரியதா அல்லது வித்தியாசமானதாக எப்படி இருக்கும். நம்மைப் படைத்தவருக்கு நாம் அனைவரும் சமம். சாதி, மதம் என்று எதுவும் கிடையாது. இந்த வேறுபாடுகளை பூசாரிகள்தான் உருவாக்கினார்கள்.

அவை தவறு. இன்றைய சூழ்நிலையில் உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்திலும் கவனம் செலுத்துங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களது மதத்தை விட்டுவிடாதீர்கள். சமயச் செய்திகளை எடுத்துரைக்கும் விதம் வேறுபட்டாலும், கொடுக்கப்படும் செய்திகள் ஒன்றுதான்.

மற்றவர்களின் மத நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், ஒருவர் தனது மதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். காசியில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டபோது சத்ரபதி சிவாஜி ஒரு முறை ஒளரங்கசீப்புக்குக் கடிதம் எழுதினார்.

அதில், இந்துக்களும், முஸ்லிம்களும் கடவுளின் பிள்ளைகள். இதில் ஒருவர்மீது விரோதத்தைக் காட்டுவது தவறு. அனைவருக்கும் மதிப்பு கொடுப்பது உங்களது கடமை.

இந்துக்களுக்கு எதிரான செயல்கள் நிறுத்தப்படவில்லையெனில் நான் வாள் எடுக்கவேண்டி வரும் என்று குறிப்பிட்டிருந்தார். உங்கள் மதம் சொல்கின்றபடி உங்கள் வேலையைச் செய்யுங்கள். சமுதாயத்தை ஒன்றிணைத்து அதன் முன்னேற்றத்துக்காக பாடுபடுங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!