நள்ளிரவு நேரத்தில் தானாக நகர்ந்த அரசுப் பேருந்து : த்ரில் காட்சி!!

23 January 2021, 4:53 pm
Andhra Bus - Updatenews360
Quick Share

ஆந்திரா : நெல்லூர் பேருந்து நிலையித்தல் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தானாக நகர்ந்து வந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ராவூரு பேருந்து நிலையித்தில் அரசுப் பேருந்தை ஒட்டுநர் நிறுத்தி வைத்து சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில எதிர்பாராத விதமாக பேருந்து தானாக நகர்ந்து சென்றது.

அப்போது பேருந்து நிலையத்தில் யாரும் இல்லை. நகர்ந்து சென்ற பேருந்து பயணிகள் காத்திருப்பு பகுதியில் மோதி நின்றது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பேருந்தது தானாக நகர்ந்து சென்ற காரணம் குறித்து ஆந்திர மாநில போக்குவரத்துக்கழகம் விசாரணை நடத்தி வருகிறது.

Views: - 5

0

0