மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டம்.., 40 நாட்களில் 69 லட்சம் பேர் பதிவு..!

24 August 2020, 9:56 am
Quick Share

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இதற்கென இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கடந்த 40 நாட்களில் 69 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர்.

ஆனால், வேலைக்காக சென்றவர்களின் எண்ணிக்கை வெறும் 691பேர் மட்டுமே.மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் இது குறித்து தகவல் அளித்துள்ளது. அதில், பதிவு செய்த 69 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், 1.49 வட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டது. ஆனால் அவர்களில் 7,700 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.

இந்த வேலை வாய்ப்பு திட்டத்தில், செவிலியர்கள், கணக்கு நிர்வாகிகள், தூய்மைப்பணியாளர்கள் கொரியர் டெலிவரி நிர்வாகிகள், மற்றும் விற்பணை முகவர்கள் உள்ளிட்டோர் தேவை அதிகம் இருந்ததால், அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

ஆனால், இந்த இணையத்தில் , எலக்ட்ரீசியன், தையல்காரர்கள், கள தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை தேர்தோர் அதிக அளவில் வேலைக்காக பதிவு செய்திருந்தனர். இதில், 42.3 சதவீதம் பேர் உத்திரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் மேலும், முன் குறிப்பிட்ட மாநிலங்களை தவிர்த்து, டெல்லி, கர்நாடகா, தமிழகம் தெலங்கனா உள்ளிட்ட மாநிலங்கள் தொழில் பற்றாகுறையை எதிர்கொள்வதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

Views: - 45

0

0