“தங்கத்த உரசாதீங்கப்பா“ : சிபிஐக்கு செக் வைத்த கேரள அரசு!!

4 November 2020, 4:38 pm
Pinarayi Vijayan - Updatenews360
Quick Share

கேரளா : மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ விசாரணை செய்ய முடியாது என கேரள அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றப்படும் வழக்குகளை எந்த மாநிலங்களுக்கு சென்றும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி சிபிஐ எந்த மாநிலங்களுக்கும் அனுமதியில்லாமல் சென்று விசாரணை நடத்தலாம்.

இந்த அனுமதி ஒப்புதலை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் ரத்து செய்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்த பாணியை கேரள அரசும் கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. சிபிஐ-க்கு வழங்கப்பட்டு இருந்த பொது ஒப்புதலை ரத்து செய்ய கேரள முடிவு செய்துள்ளதால் இனி அந்த அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ விசாரிக்க முடியாது.

விசாரணைகளுக்கு மாநில அரசின் அனுமதி பெற்றே சிபிஐ நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சரி, தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசு சிக்கியுள்ளதால் ஒரு வேளை இந்த முடிவு எடுக்க வாய்ப்பிருக்கலாம். எதுக்கு நமக்கு பெரிய இடத்து சமாச்சாரம் எல்லாம்.

Views: - 16

0

0